சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் பாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் வேல ராமமூர்த்தியின் பிறந்தநாளை எதிர்நீச்சல் குழு விமர்சையாகக் கொண்டாடியுள்ளது.
கழுத்தில் மாலையிட்டு மரியாதை செலுத்தி கேக் வெட்டி வேல ராம மூர்த்தியின் பிறந்தநாளை குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை அத்தொடரின் நடிகைகள் பகிர்ந்துள்ளனர். சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அப்படங்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், நடிகர் மாரிமுத்துவுக்குப் பிறகு ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் வேல ராமர்மூர்த்தி நடித்து வருகிறார்.
மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. வில்லத்தனத்துடன் நக்கல் நகைச்சுவை கலந்த பாத்திரம் என்பதால், பலதரப்பட்ட ரசிகர்களையும் அப்பாத்திரம் கவர்ந்தது.
தற்போது ஆதி குணசேகரனாக நடித்துவரும் வேல ராமமூர்த்தி நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை எதிர்நீச்சல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்தக் கொண்டாட்டத்தில் நடிகர், நடிகைகள் உள்பட எதிர்நீச்சல் தொடர் இயக்குநர் திருச்செல்வம் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடிகர் வேல ராமமூர்த்திக்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. அதன் பிறகு கேக் வெட்டி எதிர்நீச்சல் குழுவினர் கொண்டாடினர்.
எழுத்தாளரான வேல ராமமூர்த்தி 30க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.