முகப்பு
செய்திகள்

மம்மூட்டி, ஜீவா நடித்துள்ள யாத்ரா - 2 டிரைலர்!

நடிகர்கள் மம்மூட்டி, ஜீவா இணைந்து நடித்துள்ள ‘யாத்ரா 2’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:40 PM
பகிர்:

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், யாத்ரா 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.