செய்திகள்

அட்லி தயாரிக்கும் ‘பேபி ஜான்’

இயக்குநர் அட்லி தயாரிப்பில் உருவாகும் தெறி ஹிந்தி ரிமேக் படத்தின் பெயரை அறிவித்துள்ளனர்.

DIN

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். 

ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

தற்போது, அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து வருகிறார்.

வருண் தவான் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பின் விடியோவைப் படக்குழு பகிர்ந்திருந்தது. பிரியா அட்லி தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடிக்க உள்ளனர். காளிஸ் இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘பேபி ஜான்’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் வருகிற மே 31 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT