செய்திகள்

கருப்பு வெள்ளை வடிவில் வெளியாகும் பிரம்மயுகம்!

மம்மூட்டி நடித்துள்ள பிரம்மயுகம் திரைப்படம் கருப்பு வெள்ளை வடிவத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற பிப்.15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் முழுவதும் கருப்பு வெள்ளை வடிவத்தில் (பிளாக் அண்ட் ஒயிட்) உருவாக்கப்பட்டிருப்பதை படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

SCROLL FOR NEXT