செய்திகள்

’என்னை அறிந்தால்..’: அருண் விஜய் நெகிழ்ச்சி!

என்னை அறிந்தால் படத்தால்தான் எல்லாம் கிடைத்ததாக நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

DIN

நடிகர் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் - என்னை அறிந்தால். 2015-ல் வெளியானது. அஜித்தின் முக்கியமான திரைப்படம் என்கிற அளவுக்குப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. 

முக்கியமாக, இப்படத்தில் விக்டர் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கும் திருப்புமுனைப் படமாக இது அமைந்தது. 

இந்நிலையில், என்னை அறிந்தால் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அப்படி, ரசிகர் ஒருவர் ‘விக்டர் வெறும் கதாபாத்திரம் மட்டுமல்ல. திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை உணர்வுப்பூர்வமாக பிணைத்த ஒன்று.’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். 

அதைப் பகிர்ந்த அருண் விஜய், ‘எல்லாமே இங்கிருந்துதான் துவங்கியது’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். 

அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘மிஷன்’ திரைப்படம் 25-வது நாளை நிறைவு செய்து வெற்றிப்படமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கார் வெடித்து விபத்து: 8 பேர் பலி, பலர் காயம்

ரீநியூ நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.467 கோடி!

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: விபத்தா? சதிச்செயலா?

புத்துணர்வு... மாலத்தீவுக் கடல்... ராய் லட்சுமி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

SCROLL FOR NEXT