ஏ.ஆர்.ரஹ்மான் 
செய்திகள்

இந்தியாவுக்கு பொழியும் கிராமி மழை: ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்

'கிராமி' விருது வென்ற இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

DIN

'கிராமி' விருது வென்ற இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

66-வது 'கிராமி' விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிறந்த ஆல்பம் பிரிவில் சக்தி குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்கிற ஆல்பத்துக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், உஸ்தாத் ஜாகீர் உசேன் ஆகியோர் விருதை பெற்றனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், மூவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, “இந்தியாவுக்கு கிராமி மழை பொழிகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், உஸ்தாத் ஜாகீர் உசேனுக்கு இது மூன்றாவது கிராமி விருது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தென்காசியில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்வு: இடம் குறித்து அமைச்சா் ஆய்வு

திமுகவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும்: கே.டி. ராஜேந்திர பாலாஜி

ஆலங்குளத்தில் பிஎஸ்என்எல் சேவை ரத்து

SCROLL FOR NEXT