சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் 100 நாள்களைக் கடந்துள்ளது. இதனைக் சிங்கப் பெண்ணே குழுவினர் கொண்டாடியுள்ளனர். சின்னத்திரை ரசிகர்கள் பலர் சிங்கப் பெண்ணே குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பெண்ணெ தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய முதல் வாரத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அமல்ஜித், தர்ஷக் கெளடா ஆகியோர் நடிக்கின்றனர்.
படிக்க | எதிநீச்சல் நடிகர்களின் ஒருநாள் பயணம்!
கிராமத்தில் வளர்ந்த இளம் பெண் குடும்ப வறுமை காரணமாக நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே கயல், எதிர்நீச்சல் போன்ற முன்னணி தொடர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது.
அதனைத் தொடர்ந்து பல வாரங்களில் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து சிங்கப் பெண்ணே தொடர் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருக்கிறது.
கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரை இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.