செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்?

நடிகர் விஜய்யிடம் இயக்குநர் வெற்றிமாறன் கதை சொல்லியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்கிற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் விஜய், சினிமாவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தது அவருடைய ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக வெற்றி கழகம் என்கிற தன் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கோட் மற்றும் நடிக்கவிருக்கும் விஜய் - 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை அறிவித்துள்ளார். 

விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் தலைவராக முதல் படம் என்பதால், இப்படம் நிச்சயம் அரசியலை மையமாக வைத்தே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இச்சூழலில் இயக்குநர் அ.வினோத் நடிகர் விஜய்யிடம் அரசியல் கதை ஒன்றைக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியானது. 

தற்போது, தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த டிவிவி நிறுவனம் விஜய்யின் 69-வது படத்தைத் தயாரிப்பதாகவும் இதை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஜய்யிடம் கதை சொல்லியிருக்கிறார். ஆனால், விஜய் மற்றும் வெற்றிமாறனின் அடுத்தத்தடுத்த பட வேலைகளால் அது தள்ளிப்போனது.

இந்நிலையில், விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்புண்டு என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், விடுதலை - 2, வாடிவாசல் என வெற்றிமாறனும் பரபரப்பாக இருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT