செய்திகள்

மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம்: மனம் திறந்த நடிகை நஸ்ரியா! 

தனக்கு பிடித்த கதாபாத்திரம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் நடிகை நஸ்ரியா. 

DIN

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. அடுத்து ராஜா ராணி படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். 

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் 2018இல் கூடே படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். பின்னர் ஃபகத் ஃபாசிலுடன் அவர் இணைந்து நடித்த டிரான்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அண்டே சுந்தராணிக்கி என்ற தெலுங்கு படத்தில் நானியுடன் நடித்த படமும் மிகவும் வரவேற்பு கிடைத்தது. இது அவரது முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்த ஓம் சாந்தி ஓஷனா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இந்தப் படக் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் நஸ்ரியா. அவர் கூறியதாவது: 

மகிழ்ச்சியான 10 ஆண்டுகள். ஒரு தசாப்தத்துக்கு முன்பு வெளியான படம் ஓம் சாந்தி ஓஷனா. இப்போதும் என்னை பூஜா என அழைக்கிறார்கள். அது எனக்கு சிலிர்ப்பை அளிக்கிறது. அந்தக் கதாபாத்திரம் ரௌடி பேபி போன்றவள்; அனைவருக்கும் பிடித்தமானவள். அவள் காதலித்த விதம். (காதல் எமோஜியுடன் நெருப்பு எமோஜி). என்னையும் பூஜாவையும் அவளது காதலையும் நம்பியவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன். எப்போதும் எனது சிறந்த நடிப்பினை தர முயற்சிக்கிறேன். 

இந்தக் கதாபாத்திரம்தான் எனக்கும் பல பெண்களுக்கும் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT