செய்திகள்

விவாகரத்தாகி 3 ஆண்டுகள்.....திருமகள் தொடர் நாயகனுடன் கைகோர்க்கும் வில்லி நடிகை!

நடிகை நிவேதிதாவுக்கு விவாகரத்தாகி 3 ஆண்டுகளான நிலையில், திருமகள் தொடர் நாயகனுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

DIN

நடிகை நிவேதிதாவுக்கு விவாகரத்தாகி 3 ஆண்டுகளான நிலையில், திருமகள் தொடர் நாயகனுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

வாணி ராணி, திருமகள், கல்யாணபரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியபட்டவர் நடிகை நிவேதிதா. இவர் திருமகள் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மகராசி தொடர் நாயகன் ஆர்யனுடன் திருமணம் நடைபெற்றது. 

பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக நிவேதிதா - ஆர்யன் பிரிந்தனர். இந்நிலையில் திருமகள் தொடரில் நடிக்கும்போது அத்தொடரின் நாயகன் சுரேந்தர் உடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.  இது குறித்து நிவேதிதாவின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை நிவேதிதா அவரது இன்டாகிராம் பக்கத்தில், "என் அன்பு நண்பர்களுக்கு, நான் விவாகரத்து பெற்று 3 வருடங்கள் ஆகிறது. எனக்கு புதிய காதல் கிடைத்துள்ளது, அந்த முக்கியமானவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழ்வதற்காக  முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டினாலும், என்னை புரிந்துகொண்டு, தயவு செய்து நாகரீகமற்ற கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும். நேர்மறையான சிந்தனைகளில் கவனம் செலுத்துவோம். புரிதலுக்கு நன்றி!" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வைரலாகும் ஜான்வி கபூர்!

மேலும் நிவேதிதா, சுரேந்தர் உடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT