செய்திகள்

ராமாயணம் படத்துக்காக புதிய குரல் பயிற்சியில் ரன்பீர் கபூர்!

நடிகர் ரன்பீர் கபூர் ராமாயணம் படத்துக்காக புதிய முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, அடுத்ததாக ராமாயணத்தை படமாக்க உள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் நிதிஷ் திவாரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் யஷ், ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. 

இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபீருக்கு குரல் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து, “ரன்பீரின் குரல் மிகவும் தாழ்ந்து ஒலிக்கும் இசைக்குரலாக முயற்சிக்கப்படுகிறது. நீங்கள் கண்களை மூடிக்கொண்டாலும் ரன்பீரின் குரலை மட்டுமே வைத்து நீங்கள் புரிந்துக் கொள்ள முடியும். இதை ஒரு குறியீடாகப் பயன்படுத்த உள்ளோம். இதற்கு முன்பு ரன்பீர் நடித்த படங்களில் இல்லாத ஒரு குரலை இயக்குநர் பயன்படுத்தவிருக்கிறார். ஒரு நடிகராக இதை முயற்சிப்பதில் ரன்பீர் ஆர்வமுடன் இருக்கிறார்” எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விரைவில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் படம் 2025இல் வெளியாகுமெனவும் தகவல்கள்கள் தெரிவிக்கின்றன. ரன்பீர் கபூரின் அனிமல் படம் வசூல் ரீதியாக கலக்கினாலும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உள்பட இருவர் பலி!

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

SCROLL FOR NEXT