செய்திகள்

திரையரங்கில் அடித்துக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, பவன் கல்யாண் தொண்டர்கள்!

’யாத்ரா 2’ திரையிடலின்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் கட்சித் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

DIN

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி. ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் இன்று ஆந்திரம், தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்நிலையில், ஹைதராபாத்தில் இப்படத்தைத் திரையிட்ட திரையரங்கம் ஒன்றில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சித் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

சில மாதங்களாகவே ஜெகன் மோகன் ரெட்டியும், பவன் கல்யாணும் கருத்தியல் ரீதியாக தாக்கிப் பேசி வருவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில்தான் இந்தத் தொண்டர்கள் சண்டை நிகழ்ந்திருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

SCROLL FOR NEXT