விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விஷ்ணுவர்தன் 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தேசிய விருது பெற்ற 'ஷெர்ஷா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்த பிறகு, அவர் இப்போது தனது அடுத்த படத்திற்காக நடிகர் சல்மான் கானுடன் இணைந்துள்ளார்.
தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் தவிர சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: லால் சலாம் பேசும் மதநல்லிணக்கம் எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் இணைந்துள்ளார். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.