செய்திகள்

அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம்: நடிகர் ரஜினி வாழ்த்து!

லால் சலாம் படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் ரஜினி தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், லால் சலாம் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் இன்று (பிப்.9) படம் வெளியானது. 

2.32 மணி நேரம் ஓடக்கூடிய லால் சலாம் படத்தில் இடம்பெற்ற தகாத வார்த்தைகள், மத ரீதியான வசனங்கள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT