முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் எஸ்கே - 21 டீசர்?

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டீசர் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 5:00 PM
பகிர்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுது.

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் பெயர் அறிவிப்பு டீசரைப் பார்த்த இயக்குநர் நெல்சன் படக்குழுவைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், எஸ்கே - 21 டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.17 ஆம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →