நடிகர் முரளி, சுவலட்சுமி நடித்து 1998-ல் வெளியான படம் ‘தினந்தோறும்’. இப்படத்தை நாகராஜ் இயக்கியிருந்தார். தொடர்ந்து, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘மின்னலே’, ‘காக்க காக்க’ படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ், 2013-ம் ஆண்டு ‘மத்தாப்பு’ படத்தை இயக்கினார்.
தற்போது, க்யூ சினிமாஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், நாகராஜ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், முதல் படத்தில் வெற்றி கொடுத்தவர், மது பழக்கத்துக்கு அடிமையாகி அதிகாலை 4 மணிக்கு குடிக்கும் அளவிற்கு மோசமான நிலைமைக்குச் சென்றதையும் அதனால், இயக்குநர் வாய்ப்பு மெல்ல மெல்ல பறிபோனதையும் அதிலிருந்து மீண்டு வந்தது பற்றியும் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: எதிர்பார்ப்பைத் தூண்டும் மஞ்சுமேல் பாய்ஸ் டிரைலர்!
முக்கியமாக, “குடிப்பழக்கம் மிக மோசமான விளைவையே உண்டாக்கும். வீட்டிற்குள் மது நுழைந்தால், வீட்டிலிருப்பவர்கள் வெளியே செல்ல வேண்டியதுதான். மதுவுக்கு அடிமையாக இருந்தேன். எப்போதும் என் வீட்டில் மது பாட்டில்கள் இருக்கும். ஒருகட்டத்தில் என் நண்பர்கள் அறிவுரை சொன்னாலும் குடிக்கும் நிலையில் இருந்தேன். நடிகர் விஜய்க்கு கதை சொல்ல சென்றபோது நான் குடித்திருந்ததை எஸ்.ஏ.சந்திரசேகர் கவனித்தார். கதை பிடித்திருந்தாலும் நான் இயக்குவேன் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. பின், குடியால் தனிப்பட்ட வாழ்க்கையில் கசப்புகள் ஏற்பட்டன. இப்போது, மதுப்பழக்கம் இல்லை. குடியை விட்டுவிட்டேன். உடல்நிலை மிக முக்கியம். அதைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருங்கள். ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்துவிடாதீர்கள். அமைதியாக வாழ்வை எதிர்கொள்ளுங்கள். கடும் உழைப்பிற்கு ஒரு இடம் உண்டு” என நம்பிக்கையளிக்கிறார் தினந்தோறும் நாகராஜ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.