செய்திகள்

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘ஹார்ட் பீட்’

பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது புதிய தொடரை வெளியிட உள்ளது.

DIN

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஹார்ட் பீட் இணையத் தொடர். ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், எப்படி நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை, மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு வந்த மருத்துவர் ரீனா விளக்குவதை, இந்த ப்ரோமோ வீடியோ காட்டுகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முந்தைய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்களான ‘மத்தகம்’ மற்றும் ‘லேபிள்’ தொடர்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்”   தொடருக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தத் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் சீரிஸை ‘எ டெலி ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கிறது,  இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார். மார்ச் 8 ஆம் தேதி இத்தொடர் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு

தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

SCROLL FOR NEXT