செய்திகள்

பிரதீப் ஆண்டனி நடிக்கும் புதிய படம்: முன் தொகை இத்தனை லட்சங்களா?

DIN

பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, அதிரடியாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக போட்டியாளர்கள் முன்வைத்தனர்.

இதனால் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இதற்கு பிரதீப்பின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக பிரதீப் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “இந்த வருஷம் நடித்து கொஞ்சம் காசு சாம்பாதிக்கலாம்னு அட்வான்ஸ்லாம் வாங்கியிருக்கேன். படம் பொறுமையாதான் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய படத்திற்கு பிரதீப் ஆண்டனி வாங்கிய முன் தொகை 9 லட்சத்திற்கான காசோலை புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

ராயன் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா!

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT