முகப்பு
செய்திகள்

’நடிக்க வருகிறேன்..’: சமந்தா

நடிகை சமந்தா தன் உடல்நலம் குறித்த விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 4:27 AM
பகிர்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால்  சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

மேலும், அவர் தன்னுடைய உடல் நிலை குறித்து அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிக்க: மகான் - 2!

இந்நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராமில் புதிய விடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலரும் கேட்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாமல்தான் இருந்தேன். விரைவில் பணிக்குத் திரும்புகிறேன். ஆனால், அதற்கு முன் உடல்நலம் குறித்த பாட்காஸ்ட் (podcast) ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவேன். பலருக்கும் அது உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →