முகப்பு
செய்திகள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்குத் திருமணம்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 10:36 AM
பகிர்:

தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் முக்கிய நாயகியாக இருக்கிறார். 

Advertisement

இந்நிலையில், நடிகை ரகுலும் பெல்பாட்டம், கணபத் படங்களின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியும் வருகிற பிப்.22 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

காதலர் ஜாக்கி பக்னானியுடன்..

இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இவர்களது திருமணம் பிப்.21 ஆம் தேதி கோவாவுக்கு அருகில் உள்ள இடத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை இருவரும் வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments