முகப்பு
செய்திகள்

எஸ்கே - 21 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2024 at 10:22 AM
பகிர்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுது.

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 


படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் பெயர் டீசர் வருகிற பிப்.16 ஆம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘சோல்ஜர்’ என பெயரிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இராணுவப் பின்னணியில்தான் எஸ்கே - 21 படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.