ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்?
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளனர். இதன் பெயர் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் நாயகியாக சப்தசாகரச்ச எல்லோ படத்தில் நடித்த ருக்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.