கிராமப் பின்னணி கதையில் சிவகார்த்திகேயன்?
எஸ்கேவின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபி ரஜினியின் 173வது திரைப்படத்தை இயக்குகிறார்.
மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி இணையலாம் என்றும் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததாகவும் இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது, இப்படம் மதுரையில் நடக்கும் கிராமப் பின்னணி கதையாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது உறவுகளை மையப்படுத்திய கதையாகவும் இருக்கலாம் எனத் தெரிகிறது.
reports suggests sivakarthikeyan play in village backdrop story
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.