இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் எது தெரியுமா?
இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படம் படம் குறித்து...
இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவிற்கு இந்தாண்டு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் மலையாளம் தவிர மற்ற மொழித் திரைப்படங்களில் ஹிட் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என்றில்லாமல் ஹிந்தி வரை இந்தப் பிரச்னையே நீடிக்கிறது. ஆனால், பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் எப்போதும் ஓர் எதிர்பார்ப்பைத் தக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.
Advertisement
Advertisement
இந்தாண்டு ஆரம்பத்தில் இந்தியளவில் துரந்தர் - 2 திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதில் ஓரளவு பூர்த்தியும் கிடைத்தது. தற்போதைய நிலவரப்படி இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் உள்ளதாம்.
ஐம்டிபி (imdb) வெளியிட்ட பட்டியலில் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் இப்படம் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் அவரபான் 2 (awaraban 2), 3-வதாக இந்திரஜால் (indrajaal)ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி திரைப்படம் 5-வது இடத்தில் உள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Information regarding the most anticipated movies of the year has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.