படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த சிவகார்த்திகேயன்!
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்து அசத்தியது.
அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளனர். இதன் பெயர் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
தற்போது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன் 23-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 39-வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
தன் பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்தளித்து எஸ்கே தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்!