செய்திகள்

நூலிழையில் உயிர்தப்பிய ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா நூலிழையில் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த விமானம் 30 நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்து இருந்த இருந்தனர்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸுடன் இருக்கும் ஒரு சுயபடத்தை வெளியிட்டு, "இன்று நாம் மரணத்திலிருந்து தப்பித்தோம்..." எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகிய அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்து இருந்தார்.

இவர் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT