இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின், விஜய்யுடன் லியோவில் இணைந்த லோகேஷ் அதையும் வெற்றிப் படமாக்கினார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், 2021-ல் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மம்மூட்டி நடித்த முத்ரா என்கிற படத்திலிருந்து நகலெடுக்கப்பட்டதாக ரசிகர்கள் விடியோ வெளியிட்டு வருகின்றனர்.
மாஸ்டரில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்று அங்குள்ள சிறுவர்களை விஜய் திருத்துவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதே போன்ற காட்சிகள் சிபி மலயில் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் 1989-ல் வெளியான முத்ரா திரைப்படத்தில் உள்ளன. இந்த இரு படங்களின் காட்சிகளையும் இணைத்து, லோகேஷ் கனகராஜ் காப்பியடித்த காட்சிகள் என வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது, நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.