செய்திகள்

தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

DIN

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கரான ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவம் படித்த இவர் 2019-ல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார்.

ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து கவனம் பெற்றவருக்கு அப்படத்தில் இடம்பெற்ற பல்சர் பாடல் பிரபலமாக்கியது. சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப்பழகிய ஸ்ரீலீலா நடனமாடினால் உடல் வில்லாக மாறிவிடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, லீலாவின் சினிமா வாழ்க்கை புயல் வேகத்தில் மாறியது.

தற்போது மகேஷ்பாபு, பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில், குண்டூர் காரம் படத்தில் நடித்தார். அதிலும், ‘குர்ச்சி மாடதபெட்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.

இந்நிலையில், சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என ஸ்ரீ லீலா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT