முகப்பு
செய்திகள்

துணிவு நடிகர் காலமானார்!

துணிவு படத்தில் நடித்த நடிகர் ரிதுராஜ் சிங் காலமானார்.

Updated On : 21 பிப்ரவரி, 2024 at 5:22 AM
பகிர்:

இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. வங்கிக்கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமானது.

இந்நிலையில், துணிவு படத்தில் நடித்த நடிகர் ரிதுராஜ் சிங்(59) மாரடைப்பால் நேற்று(பிப்.20) காலமானார்.

பல ஹிந்தி, பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ரிதுராஜ் சிங், சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இறுதியாக துணிவு, யாரியான் - 2 ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →