செய்திகள்

போலி இன்ஸ்டா கணக்கு: புகாரளித்த வித்யா பாலன்!

நடிகை வித்யா பாலன் தன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

DIN

மலையாளியான நடிகை வித்யா பாலன் பாலிவுட்டில் பிரபல நாயகியாக அறியப்படுபவர். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெளியான ‘டிர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் கஹானி படத்தின் மூலம் ஹிந்தியில் முக்கிய நாயகியானார்.

தொடர்ந்து, நல்ல நடிகை என்கிற பெயரைப் பெற்ற வித்யா பாலன் நாயகியை மையமாகக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வித்யா நடிப்பில் வெளியான ‘ஷெர்னி’ படம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றது. தற்போது, புல் புலய்யா - 3 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் மர்மநபர் ஒருவர் தன் பெயரில் போலி கணக்கு தொடங்கி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக வித்யா பாலன் மும்பை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் பிரிவு, விசாரணையைத் துவங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

SCROLL FOR NEXT