செய்திகள்

ராயன் படத்தில் பிரகாஷ் ராஜின் தோற்றம்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் பிரகாஷ் ராஜின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு "ராயன்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜின் தோற்றம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

SCROLL FOR NEXT