முகப்பு
செய்திகள்

ரஷியா செல்லும் கோட் படக்குழு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்பட பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதால் விரைவில் படக்குழு அங்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →