செய்திகள்

நினைவுகளுக்கு நன்றி: ரசிகையைப் பாராட்டிய நடிகை ஜோதிகா!

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவரின் விடியோவைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவரின் விடியோவைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.

தற்போது மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் ‘சைத்தான்’ படம் உருவாகியுள்ளது. மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

மாதவன் - ஜோதிகா நடிப்பில் உருவான ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ ஆகிய படங்களுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாழும் தமிழ்ப்பெண் ஷெல்ஃபி ஷாலு எனும் ஷாலினி தனது ஓய்வு நேரங்களில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிடுகிறார். நடிகை ஜோதிகாவின் பாடலுக்கு இவர் செய்யும் ரீல்ஸ்கள் மிகவும் பிரபலமானது. ரசிகர்கள் பலரும் ஷாலினியை ஜோதிகாவின் தங்கை, மினி ஜோதிகா என புகழும் அளவுக்கு ஜோதிகா மாதிரியே உடையணிந்து, அவரைப்போலவே நடனமாடி அசத்தி வருகிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு ஜோதிகாவின் பல கோடி பெண்களில் பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டிருந்தார் ஷாலினி. தற்போது, நடிகை ஜோதிகா அதனைப் பகிர்ந்து, “அன்பு மற்றும் நினைவுகள் அனைத்துக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஜோதிகா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி.

இதனைப் பகிர்ந்த ரசிகை ஷாலினி, “உங்களது பதிலுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் ஜோதிகா மேம். இறுதியாக, எனது கனவு நனவாகியது”என நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

ஜோதிகாவின் சைத்தான் படம் மார்ச் 8-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT