முகப்பு
செய்திகள்

விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அறிவிப்பு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 1 ஜனவரி, 2024 at 11:47 AM
பகிர்:

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ்,  சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுகிறது.

Advertisement

விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(டிச. 31) மாலை 6 மணிக்கு  கோட் (G.O.A.T. - The Greatest Of All Times) என்ற தலைப்புடன் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில், கோட் படத்தின் செகண்ட் லுக் (இரண்டாம் பார்வை) போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.