செய்திகள்

ஓடிடியில் ஹாய் நான்னா!

நானியின் ஹாய் நான்னா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

DIN

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.  இவர் நடித்த 30-ஆவது படம்  'ஹாய் நான்னா'.

இவர் நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி', 'கேங் லீடர்', 'ஷ்யாம் சிங்கா ராய்' உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. தமிழில் வெளியான வெப்பம், நான் ஈ படங்களும் நல்ல ஆதரவு இருந்தது.

ஹாய் நான்னா சௌரவ் இயக்கியுள்ளார். மிருணாள் தாகூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இப்படம் டிச.7ஆம் தேதி உலகளவில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த நிலையில், 'ஹாய் நான்னா' திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 3.6 ஏக்கா் நிலம் தானம்: உரிமையாளா் வாரிசுகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு

SCROLL FOR NEXT