செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

என்னதான் வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

சதிஷ் நடிப்பில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட ‘காதல் தி கோர்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

'ஹாய் நான்னா' திரைப்படம் இன்று(ஜன. 4) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரனாவத் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்த தேஜஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜன. 5 ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் தேஜா மார்னி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராகுல் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்த கோடபொம்மாலி பிஎஸ் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜன. 5 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT