செய்திகள்

வெளியானது அருண் விஜய்-யின் 'மிஷன் சேப்டர்-1' பட டிரைலர்

DIN

அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சேப்டர்-1 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

முறை மாப்பிள்ளை  படத்தின்  மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார். தற்போது, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர்-1  ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாகவும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஜன.12ஆம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. 

அதனால் ஜன.12 ஆம் தேதி வெளியாகவுள்ள மிஷன் சேப்டர்-1  ‘அச்சம் என்பது இல்லையே’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT