செய்திகள்

தனுஷ் நடிப்பைப் பார்த்து மிரண்ட பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் முன் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லரின் முன் வெளியீட்டு விழா நேற்று (ஜன.3) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

இதில் நடிகை பிரியங்கா மோகன், “இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கேப்டன் மில்லர் எனக்கு மிகவும் குறிப்பிடத்தக்க படம். அருண் சார் கதை சொன்ன போதே, மிகவும் ஆர்வத்துடன் இருந்தது. எனக்கு வரலாற்று படங்கள் என்றாலே பிடிக்கும், அப்படிப்பட்ட படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக அந்த காலகட்டத்தைக் கொண்டு வர, எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

எனக்குத் துப்பாக்கி பிடிக்கவே தெரியாது, என்னை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். அதற்காக பயிற்சியளித்த அனைவருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய படத்தை தயாரிப்பது மிகப்பெரிய வேலை. சத்ய ஜோதி பிலிம்ஸ் தந்த ஆதரவுக்கு நன்றி. ஜீவி சார் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். சிவராஜ்குமார் சாருடன் இணைந்து நடித்தது பெருமை. அருண் உண்மையில் செம்ம ஜாலியானவர், கடுமையாக உழைத்திருக்கிறார். நான் தனுஷ் சாருக்கு பெரிய ரசிகை. அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. அவர் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.  நன்றி" எனப் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT