வைரலாகும் சாய் பல்லவி, நாக சைதன்யாவின் புதிய பட விடியோ!
நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
சாய்பல்லவியின் கார்கி, விராட பருவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் 23வது படமான ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப் படத்தினை சந்தோ மோன்டெடி இயக்கி வருகிறார். நாக சைதன்யாவின் 22வது படம் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி மோசமான விமர்சனங்களை கொடுத்தது.
இதையும் படிக்க: உதவி செய்வதை நான் விளம்பரம் செய்வதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்தப் படம் மீனவர்கள் பற்றிய படமாக இருக்குமெனவும் அதற்காக நாக சைதன்யா ஸ்ரீகாகுளம் பகுதியில் மீனவ சமூகத்தினரை சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.
சாய் பல்லவி தற்போது சிவ கார்த்திகேயனின் 21வது படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தப்படத்தின் எஸ்ஸென்ஸ் ஆஃப் தண்டேல் விடியோ வெளியாகியுள்ளது. படத்தின் சாரம் இதுதான் என்பதுபோல இந்த விடியோ அமைந்துள்ளது. எக்ஸ்ஸில் இந்த விடியோ வைரலாகி வருகிறது.