செய்திகள்

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவின் மொத்த சம்பளம்?

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமா, அந்நிகழ்ச்சியின் மூலம் பெற்ற மொத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமா, அந்நிகழ்ச்சியின் மூலம் பெற்ற மொத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன், 97 நாள்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து ஏழு சீசன்களாக தொகுத்து வழங்குகிறார்.

மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், விஷ்ணு, அர்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, விசித்ரா, விஜய் ஆகிய 8 பேரை தவிர பிற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

‘டிக்கெட் டூ பைனல்’ டாஸ்கில் வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர மற்ற 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வழக்கம்போல் 14-வது வாரத்தில் வைக்கப்படும் பணப்பெட்டி வைக்கப்படும். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் 8 போட்டியாளர்களில் யாராவது எடுக்க விரும்பினால் பணப்பெட்டியில் இருக்கும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம்.

பூர்ணிமா ரவி  ரவி ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை  எடுத்துக் கொண்டு சென்றார்.

இந்நிலையில், இவர் 90 நாள்களுக்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால்  ரூ.14 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும்,  இவர் ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியையும் எடுத்துச் சென்றார். மொத்தமாக இந்நிகழ்ச்சியின் மூலம் பூர்ணிமா ரூ.30 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரே... பிரீத்தி முகுந்தன்!

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

SCROLL FOR NEXT