செய்திகள்

900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகும் கேப்டன் மில்லர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இதுவரை அல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

DIN

ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர். 

தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

வெளிநாடுகளில் லைகா புரடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தினை வெளியிடுகிறது. 

இந்நிலையில் உலக அளவில் 900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாக இருக்கிறது. இதுதான் தனுஷ் படங்களில் பிரமாண்ட ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகப்பெரிய சினிமா வெற்றியினைப் படைக்க சர்வதேச அளவில் களம் அமைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT