செய்திகள்

குண்டூர் காரம்: மகேஷ் பாபுவின் படங்களில் இதுதான் அதிகபட்ச முதல்நாள் வசூல்!

நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்துள்ளார். 

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தமன் இசையமைத்துள்ளார்.  நடிகைகள் ஸ்ரீ லீலா,  மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் எமோஷ்னல் எண்டர்டெயின்மென்ட்டாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. 

இப்படத்தின் 3வது பாடலான ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் இணையத்தில் வைரலானது. இந்தப் பாடலுக்கு திரையரங்குகளிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. 

நேற்று வெளியான (ஜன.12) இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ. 94 கோடி வசூலித்துள்ளது. இது மகேஷ் பாபுவின் படங்களிலேயே மிகப் பெரிய வசூலெனவும், உள்ளூர் சினிமாக்களில் இதுதான் அதிகமெனவும் படக்குழு கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT