செய்திகள்

கேப்டன் மில்லர் இயக்குநரை புகழ்ந்த நடிகை அதிதி பாலன்!

கேப்டன் மில்லர் படக்குழுவினை பாராட்டிய நடிகை அதிதி பாலன் படப்பிடிப்பு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். 

DIN

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்துள்ளார். தங்கர் பச்சான் இயக்கத்தில் சமீபத்தில் இவர் நடித்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் வெளியானது.

அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் நடிகை அதிதி பாலனும் நடித்துள்ளார். 

நேற்று வெளியான கேப்டன் மில்லர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தனது படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகை அதிதி பாலன். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கேப்டன் மில்லர் உலகத்தில் எனக்கு வாய்ப்பளித்ததுக்கு மிக்க நன்றி அருண் மாதேஸ்வரன். உங்களுடன் இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் சித் விஷுவல் விருந்தினை அளித்துள்ளார். மிகவும் அழகாக இருக்கிறது. பிரியங்கா மோகன், ஸ்வய்ம் சித்தா உங்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி. உங்களுடனும் அதிகமாக படங்களில் நடிக்க வேண்டும்.

ஜான் கொக்கேன் என்னிடம் அன்பாகவும் உதவியாகவும் இருந்ததுக்கு மிக்க நன்றி.  சதய் ஜோதி ஃபிலிம்ஸ் என்ன மாதிரியான ஒரு படத்தினை தயாரித்துள்ளீர்கள். நன்றி. குறிப்பாக கலை இயக்குநர்களுக்கு பாராட்டுகள். மிகவும் அற்புதமாக வேலைப் பார்த்திருக்கிறார்கள். கேப்டன் மில்லர் குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT