செய்திகள்

குண்டூர் காரம் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளனர். 

DIN

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்துள்ளார். 

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தமன் இசையமைத்துள்ளார்.  நடிகைகள் ஸ்ரீ லீலா,  மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் எமோஷ்னல் எண்டர்டெயின்மென்ட்டாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.  

இப்படத்தின் 3வது பாடலான ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் இணையத்தில் வைரலானது. இந்தப் பாடலுக்கு திரையரங்குகளிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. 

படம் 3 நாள்களில் ரூ.164 கோடி வசூலித்துள்ளது. சங்கராத்தியை முன்னிட்டு படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகைகள் ஸ்ரீ லீலா, மீனாக்‌ஷி சௌத்ரியும் கலந்து கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT