முகப்பு
செய்திகள்

சைரன் வெளியீடு எப்போது?

நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:18 PM
பகிர்:

பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் 'சைரன்' என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், சைரன் திரைப்படம் வருகிற பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →