முகப்பு
செய்திகள்

முன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!

நடிகர் மோகன் லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி  கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.

தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து  ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.

இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பல திரைகளில் வெளியாகக் காத்திருக்கிறது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. பிரிட்டிஷ்  இந்தியா காலகட்டம், ஒளிப்பதிவு என காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன.

இந்நிலையில், கேரளத்தில் இப்படத்தின் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. முதல்நாளில் ஆன்லைன் வாயிலாக 1 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால்,  ரூ.1.24 கோடி வருவாயை இப்படம் ஈட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.