அயோத்தியில் நடிகர் தனுஷ்: புகைப்படம்
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
செய்திகள்அயோத்தியில் நடிகர் தனுஷ்: புகைப்படம்
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா அயோத்தி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தியில் ஒவ்வொரு நூறு மீட்டர் தொலைவுக்கு ஒரு மேடை என அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நண்பகலில் குழந்தை ஸ்ரீ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா துறையினர், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க | அயோத்தி விழாவில் பங்கேற்றுள்ள தமிழக பிரபலங்கள்!
தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமா் கோயிலில் ஜனவரி 23-ஆம் தேதிமுதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.