செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு: முக்கிய தொடர்களின் நேரம் மாற்றம்!

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததால், முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

DIN

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததால், முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜன. 14 ஆம் தேதி நிறைவடைந்தது. அதிகவாக்குகள் பெற்று அர்ச்சனா இப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், மணிச்சந்திரா 2 ஆம் இடத்தையும், மாயா 3 ஆம் இடத்தையும்,  பெற்றனர்.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு சின்ன மருமகள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல், பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடர், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தங்கமகள் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்த நடிகை அஸ்வினி நடிக்கிறார். 

இந்த தொடர்களின் ஒளிபரப்பு நேரம் ஜனவரி 22 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கலைஞர் தொலைக்காட்சியில் நடிகை சுஜிதா நடிக்கும் கெளரி என்ற புதிய தொடரும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் நினைத்தேன் வந்தாய் என்ற புதிய தொடரும் ஜன. 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

SCROLL FOR NEXT