கோப்புப்படம் 
செய்திகள்

விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5: போட்டியாளர்கள் இவர்களா?

குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் தொடங்கவிருப்பதால், அந்நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது.

DIN

குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் தொடங்கவிருப்பதால், அந்நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை இந்த நிகழ்ச்சி பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

எப்போதும்  பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளிவரும். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன்  குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நான்காவது சீசனில் மைம் கோபி முதலிடத்தையும், சுருஸ்டி இரண்டாம் இடத்தையும், விசித்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனின் போட்டியாளர்களாக நடிகை வடிவுக்கரசி, நடிகை தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் ஹேமா, பிக் பாஸ் பிரபலம் விஷ்ணு விஜய், நடிகை மாளவிகா மேனன், நடன இயக்குநர் ஸ்ரீதரின் மகள் அக்‌ஷதா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், சேனல் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை  வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சதத்தை தவறவிட்ட அபிஷேக் சர்மா..! இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

கையில் சிகரெட்! 120கி.மீ வேகம்! கார் விபத்தில் 4 பேர் பலி!

பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ம.பி.யில் 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்த விவகாரம்! மேயருக்கு எதிராக பஜ்ரங் தள் போராட்டம்!

பங்காளிச் சண்டை! NDAவில் இணைந்த அமமுக! | செய்திகள் சில வரிகளில் | 21.01.26

SCROLL FOR NEXT