செய்திகள்

பிரேமம் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த பிரேமம் திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பிரேமம் திரைப்படம் வெளியானது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். 

மலையாளத்தை விடவும் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்ற திரைப்படம் பிரேமம். சாய் பல்லவிக்கு இன்றும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் சிறப்பான ஒன்றாகவிருக்கிறது.  

ராஜேஷ் முருகேஷன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. பிரேமம் படத்துக்கு பிறகு மலையாள சினிமாவுக்கு தமிழில் புதிய வணிகமே உருவாகியது எனும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பல வெற்றிப் படங்கள் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டுவரும் நிலையில் பிரேமம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது. எஸ்.எஸ்.மீடியா இந்தப் படத்தினை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

காதலர் தினத்தன்று வெளியாகுமென இருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

நீர்க்குமிழிபோல வாழ்க்கை

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

SCROLL FOR NEXT